Canada

ஈற்றோபிக்கோவில் நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து பிள்ளை பலாத்காரம்? பொலிசார் பாதுகாப்பு எச்சரிக்கை!!.

இனம் தெரியாத மனிதன் ஒருவன் வீடொன்றிற்குள் நுழைந்து குழந்தை ஒன்றை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் பொது பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். கடந்த வார இறுதி நாட்களில் சம்பவம் நடந்துள்ளது. ஈற்றோபிக்கோவில் றென்வோத் டிரைவ் மற்றும் பேர்ன்ஹாம்தோப் வீதி அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் சனிக்கிழமை இரவு 11மணிக்கும் நடு இரவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் மனிதன் ஒருவன் நுழைந்து பிள்ளை ஒன்றை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டதாக பொலிசாரின் கூற்று பிரகாரம் தெரிய வந்துள்ளது.

அடுத்த நாள் இரவு 11-மணியளவில் அதே மனிதன் அதே வீட்டின் கொல்லை புறத்தில் அலைந்து திரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை பொலிசாரிடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து அப்பகுதி அக்கம் பக்கத்தாரிடம் தொடர்பு கொண்டதில் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் பல றத்பேன் வீதி முதல் புளோர் வீதி தெற்கு வரை வெஸ்ட் மோல் முதல் றென்வோத் டிரைவ் மேற்கு வரையிலான பகுதிகளில் இடம் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

தனியார் பகுதிகளிற்குள் அநாகரிகமான செயற்பாடுகள் உட்பட்ட சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவங்கள் பொலிசாருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் புலன் விசாரனை தொடர்வதாகவும் பொலிசார் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை தெரிவிக்கின்றது. பாலியல் பலாத்கார சந்தேக நபர் வெள்ளை நிறம் 20-30வயதிற்குட்பட்ட 5.8 முதல் 5.9உயரம் கட்டையான கறுப்பு முடி கொண்ட தோற்றமுடையவனென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக காணப்பட்ட போது கறுப்பு நிற ஜக்கெட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. பொதுமக்கள் யூலை28 முதல் யூலை 30வரையிலான பொது கண்காணிப்பு கமராக்களையும் சோதனை செய்யுமாறும் பொலிசார் கேட்டு கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top