அல்பானியா நாட்டில் குடும்ப உறவினர்கள் 8 பேரை சுட்டுக்கொலை செய்துவிட்டு, முடிந்தால் என்னை பிடித்துக்கொள் என பிரதமருக்கு சவால் விட்ட இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அல்பானியா நாட்டின் தலைநகர் பகுதியிலிருந்து 62 மைல்கள் தொலைவில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் Ridvan Zykaj (24). இவர் நேற்று தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து மதிய உணவு உட்கொண்டிருந்தார்.அப்போது கோழிக்கறியை திருடியதாக உறவினர்கள் Ridvan-ஐ குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த Ridvan, உடனே ஏகே 47 துப்பாக்கியை கொண்டு, தன்னுடைய மாமாவின் மகன்கள் இரண்டு பேர், அவர்களுடைய மனைவிகள் மற்றும் ஒரு இளம்பெண், 9 வயது சிறுமி உட்பட 8 பேரை சுட்டுக்கொலை செய்துள்ளார்.
பின்னர் பேஸ்புக்கில் நேரலை வீடியோ ஒன்றினை வெளியிட்ட Ridvan, முடிந்தால் என்னை பிடியுங்கள் என நாட்டின் பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து, விரைந்து செயல்பட்ட பொலிஸார், அடுத்த சில மணிநேரங்களிலே குற்றவாளியை கைது செய்தனர்.மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.