உலகத்தில் வாழ சிறந்த நான்காவது நகரம் கல்கரி?

உலகளாவிய கணக்கெடுப்பு ஒன்றின் பிரகாரம் உலகில் வாழ மிகச்சிறந்த நகரங்கள் வரிசையில் நான்காவது இடத்தை கல்கரி பெற்றுள்ளது. ரொறொன்ரோ மற்றும் வன்கூவர் பின்தள்ளப்பட்டுள்ளன. பொருளாதார நிபுணர்களின் 2018 உலக வாழ்வாதார குறியீட்டின் கணிப்பீடு-உலகம் பூராகவும் 140 நகரங்களில் மதிப்பீடு நடாத்தப்பட்டது. ஐந்து பரந்த பிரிவுகளில் 30-காரணிகளில் இந்த மதிப்பீடு நடாத்தப்பட்டது.
ஸ்திரத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்று சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு-ஆகிய ஐந்து பிரிவுகள். நான்கு பிரிவுகளில் கல்கரி நான்காவது இடத்தை பிடித்து சராசரி மதிப்பெண்ணாக 97.5ஐ பெற்றுள்ளது. வியன்னா ஆஸ்தரியா (99.1)இ மெல்போர்ன் அவுஸ்ரேலியா (98.4) மற்றும் ஒசாகா ஜப்பான் (97.7)ஆகிய நாடுகளிற்கு பின்னால் கல்கரி நிற்கின்றது. வன்கூவர்(97.3) மற்றும் ரொறொன்ரோ(97.2) பெற்று முதல் 10இடங்களிற்குள் அடங்குகின்றது.
கடந்த வருடம் கனடாவின் மூன்று நாடுகளும் முதல் ஐந்திற்குள் வந்தன. தொடர்ச்சியாக பல வருடங்கள் இந்நிலையில் இருந்துள்ளன. முதல் 10 இடங்களிற்குள் வரும் மூன்று நகரங்களை கொண்ட நாடுகள் கனடா மற்றும் அவுஸ்ரேலியா மட்டுமே. குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள் சிறந்த முடிவுகளை பெறுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவதாக அறியப்படுகின்றது.
உலக சராசரியான கனடா மற்றும் 58உடன் ஒப்பிடுகையில் அவுஸ்ரேலியா சதுர கிலோ மீற்றருக்கு 3ற்கும் 4ற்கும் இடைப் பட்ட மக்கள் வசிக்கின்றனர் என கூறபட்டுள்ளது. வசிக்க கூடிய முதல் 10நகரங்கள்:
வியன்னா,ஆஸ்தரியா
மெல்பேர்ன், அவுஸ்ரேலியா
ஓசாக்கா, ஜப்பான்
கல்கரி, கனடா
சிட்னி, அவுஸ்ரேலியா
வன்கூவர், கனடா
ரொறொன்ரோ, கனடா
டோக்கியோ, ஜப்பான்
கோப்பன்ஹெயன், டென்மார்க்
அடெலெயிட், அவுஸ்ரேலியா
10-குறைந்த வாழ்வாதார நகரங்கள்:
டமஸ்கஸ், சிரியா
டாக்கா, பங்களாதேஷ்
லாகோஸ், நைஜீரியா
கராச்சி, பாகிஸ்தான்
போட் மோரெஸ்பை, பப்புவா நியு கயானா
ஹரரெ, ஷிம்பாவ்வே
ரிப்போலி, லிபியா
டுவாலா, கமரூன்
அல்ஜியர்ஸ், அல்ஜீரியா
டகார், செனகெல்