எங்கும் கண்டிராத நகர்ப்புற கண்டு பிடிப்பு ரொறொன்ரோவில்!

ரொறொன்ரோவுடன் இணைந்து 50மில்லியன் டொலர்கள் உயர்-தொழில்நுட்ப சுற்று வட்டாரத்தை ரொறொன்ரோவில் அமைக்கும் ஒப்பந்தத்தை ஏற்றுகொண்டுள்ளது. நகர்ப்புற கண்டு பிடிப்பு தொழில் நுட்ப உட்கட்டமைப்பு மூலம் நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் வாழ்க்கை செலவு, சிறந்த போக்குவரத்து, எரிசக்தி பயன்பாட்டு செலவு போன்ற சிக்கல்களை எதிர்நோக்குவதை கருத்தில் கொண்டு அமைக்கப்படுவதென அறியப்படுகின்றது.
ரொறொன்ரோவில் இது போன்ற சுற்றுபுற அமைப்பு எதுவும் இல்லை என்பது மட்டுமன்றி உலகில் இதுவரை காணாத ஒன்றாகும் எனவும் கூறப்படுகின்றது. தரையில் அறுகோண மட்டக நடைபாதை ஐஸ் கரைந்தோடக்கூடிய மேலோட்டை கொண்டிருப்பதோடு போக்குவரத்து ஓட்டத்திற்கேற்ப நிறம் மாறக்கூடியதாகவும் அமையும். தெரு நிலையில் கடைகள் அமையும். மேலாக மர கூரைகள் அமையும். இக்கருத்துக்கள் கூகிள் சார் நிறுவனமான Sidewalk Labs-மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு எவ்வாறு செயல்படும் எனவும் இதற்கான செலவு எங்கிருந்து பெறப்படும் போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் தோன்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.