Canada

எட்டோபிக்கே விபத்தில் 84 வயதான பெண் படுகாயம்!

ரொறொன்ரோ எட்டோபிக்கேயில் இடம்பெற்ற வாகன விபத்தில், 84 வயதான பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் எவான்ஸ் வீதி அருகே கடந்த வியாழக்கிழமை இரவு 10:30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றது.

இதில், (U-TRURN) U திருப்பத்தைச் செய்ய முயற்கை செய்த வேளை குறித்த பெண் சென்ற வாகனத்துடன் மற்றுமொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் காரணமாக அந்த வாகனத்தில் பயணித்த பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக ரொறொன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top