ஐந்து வாகன மோதலில் வீட்டின் தாழ்வாரத்திற்குள் நுழைந்த கார்!

ரொறொன்ரோ-நெடுஞ்சாலை 401ற்கு அருகாமையில் கீல் வீதியில் இடம்பெற்ற ஐந்து வாகனங்கள் மோதலில் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் வாகனம் ஒன்று வீடொன்றுடன் மோதி வீட்டின் தாழ்வாரம் வரை சென்றுள்ளது.
கார் ஒன்று U-திருப்பம் ஒன்றை மேற்கொள்ள முயன்ற சமயம் அனைத்தும் இடம்பெற்றதாக சாட்சியம் தெரிவித்துள்ளது. இரண்டாவது கார் முதலாவதுடன் மோதுவதை தவிர்க்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து மூன்றாவது காருடன் மோதியுள்ளது.
மூன்றாவது கார் அருகாமையில் உள்ள வீடொன்றின் தலைவாசலுடன் மோதியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த செயலிழந்த வாகனங்களை ஏற்ற சென்ற டிரக் ஒன்று மற்றொரு காருடன் மோதி மற்றுமொரு மோதலிற்கு வழிவகுத்தது.
ஒருவர் சாதாரண காயங்களுடன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.