ஒன்ராறியோ மனிதநேய தம்பதிகள், மகள் விமான விபத்தில் மரணம்!

ஒன்ராறியோவின் ஒரு பணக்கார தம்பதிகள் மற்றும் அவர்களது மகள் ஒரு சிறிய விமானம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளனர். முக்கியமான கொடையாளிகளான இவர்கள் நயாகரா பிராந்தியத்தின் கலை, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்றனவற்றிற்கு தங்கள் நேரத்தை தாராளமாக செலவழித்தனர். ஜோசப் றொபேட்சன் 58, மற்றும் அனிட்டா றொபேட்சன் 58, இவர்களது மகள் லோரா றொபேட்சன்24, ஆகியவர்கள் இரட்டை-இயந்திர எரோஸ்டார் விமானம் கிரீன்வில் மெய்;ன் விமானநிலையத்திற்கு அருகில் நிலத்தில் மோதியதால் இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Niagara-on-the-Lake-ஐ சேர்ந்த இந்த குடும்பத்தினர் சென்.கத்தரின்ஸ், ஒன்ராறியோவில் மிகவும் பிரபல்யமானவர்கள். கலை நிகழ்ச்சி மையத்திற்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளனர்.ஜோ றொபெட்சன் புறோக் பல்கலைக்கழக சபையில் பணிபுரிந்த காலப்பகுதியில் யுனைரெட் வேயுடன் ஈடுபாடு கொண்டிருந்தார். சார்லட்டவுனில் குடும்ப விடுமுறைக்கு சென்ற சமயம் விமானம் மோதியதாக முன்னாள் சென்.கத்தரின்ஸ் மேயர் பிரயன் மக்முலான் தெரிவித்துள்ளார்.