India

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே முற்றும் மோதல்?……. ஓபிஎஸ்-வுடன் மதுசூதனன் திடீர் ஆலோசனை..

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் அவைத்தலைவர் மதுசூதனன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ்-ன் இல்லத்திற்கு சென்று மதுசூதனன் ஆலோசனை நடத்தியுள்ளார். நாளை செய்தியாளரை சந்திக்க உள்ள நிலையில் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்துவதால் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் பன்னீர்செல்வம்- பழனிச்சாமி இடையிலான அதிருப்தி வெளிப்படையாக வெடித்துள்ளது. இருநாட்களுக்கு முன் நடந்த அதிமுக செயற்குழுவில் தரவில்லை என ஓபிஎஸ் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பு பதவியை காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையை கட்சிமீது காட்டவில்லை என கருத்து தெரிவித்துள்ளார். ஒப்புக்கொண்டபடி வழிகாட்டு குழுவையும் அமைக்கத்தால் ஓபிஎஸ் தரப்பு குமுறுகிறது.

கட்சியை காப்பதற்காக துணை முதல்வர் பதவியை துறக்கத்தயார் என ஓபிஎஸ் கூறினார். எடப்படியுடனான கருத்து வேறுபாட்டை பகிரங்கப்படுத்த ஓபிஎஸ் துணிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியிலும் காட்சியிலும் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவதே ஆதங்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எடப்பாடி மீதான அதிருப்தியை ஓபிஎஸ் வெளிப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top