Canada

கடுகதி நெடுஞ்சாலைக்கருகில் பாரந்தூக்கியில் ஏறிய பெண் கைது!

ரொறொன்ரோ பகுதியில் நடு இரவில் பாரம் தூக்கி ஒன்றில் மேலே ஏறிய பெண் ஒருவர் அவசர சேவை பிரிவினரால் காப்பாற்றப்பட்டார். பாத்றஸ்ட் கப்பல் துறை பகுதியில் சம்பவம் நடந்துள்ளது. இப்பெண் 40 முதல் 45மீற்றர்கள் ஏறிச்சென்று கிரேனின் உச்சிக்கு சென்றுள்ளதாக ரொறொன்ரோ தீயணைப்பு பிரிவின் மாவட்ட தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். இப்பகுதி லேக் ஷோர் புளுவாட் மற்றும் பாத்றஸ்ட் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டுமான பணித்தளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.

குறிப்பிட்ட பெண் எப்போது எவ்வாறு அவ்விடத்திற்கு சென்றார் என்பது தெரியவரவில்லை. சம்பவம் முதன் முதலாக காலை 6.30மணியளவில் தெரியப்படுத்தப்பட்டது. கிரேனின் உச்சிக்கு செல்ல ஏணி வைக்கப்பட்டுள்ளதாகவும் பெண் ஏணிவழியாக மேலே சென்றிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. பெண்ணை கீழே இறக்குவதற்கு அவசர சேவை பணிக்குழு தீயணைப்பு படையினர் மற்றும் உயர் கோண மீட்பு குழு ஆகியன சம்பவ இடத்திற்கு இன்று காலை அழைக்கப்பட்டனர்.

கார்டினர் கடுகதி பாதைக்கருகில் தொங்கி கொண்டிருந்த கிரேனில் இருந்து மிக கவனமாக பெண்ணை தரைக்கு கொண்டு வருவது பொலிசாரின் முக்கிய நோக்கமாக இருந்தது. கடுகதி பாதை மூடப்பட்டது. கிரேனின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுதுடன் பெண்ணை கீழே கொண்டுவர மீட்பாளர்கள் ஒரு மணித்தியாலம் செலவிட்டதாக கூறப்படுகின்றது. பெண்ணை கீழே கொண்டுவர அதிகாரிகள் முயற்சிகள் செய்தனர்

. காலை 8மணிக்கு பின்னர் பெண் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டார். பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பெண் குறித்த பெயர் வயது போன்ற விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் கிட்டத்தட்ட 20வயதுடையவர் என தெரிவதாக கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top