ரொறொன்ரொவில் பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட கொடிய மோதலினால் ரயர்கள் சிதறல்கள் காற்றில் பறந்தன. முழு சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளன. காட்சிகள் சனிக்கிழமை இரவு அடில் கனா என்பவரின் பாதிக்கப்பட்ட வாகனங்களை இழுக்கும் டிரக் வண்டியில் பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் அனைத்தும் பதிவாகியுள்ளன. நெடுஞ்சாலை 401 போட் யூனியன் வீதியில் செயலிழந்து நின்ற வாகனமொன்றை கவனிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இடத்திற்கு சென்ற கனன் சாரதி இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தது பயணியாக மனிதன் ஒருவர் முன் இருக்கையில் இருந்தது மற்றும் இன்னுமொருவர் வாகனத்தின் வெளியே நின்று கொண்டிருந்ததை கண்டார். தனது வாகனத்தில் இருந்து கொண்டு கவனித்த போது அதிஉயர் வேகத்தில் லெக்சஸ் ஒன்று நெருங்குவதை கண்டுள்ளார். வெள்ளை நிற வாகனம் பிக்அப் டிரக்கை இடித்துள்ளது.
வெளியே நின்று கொண்டிருந்த மனிதன் பாதுகாப்பு கம்பியுடன் தூக்கி எறியப்பட்டார். டிரக்கிற்குள் இருந்த இருவரும் வெளியே எடுக்கப்பட்டனர். வாகன சாரதி நெடுஞ்சாலையில் தலை குப்புற விழுந்துள்ளார். மூவரும் பெரிதாக பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.