கனடாவின் விமான வரலாற்றின் ஒரு வரலாற்று சின்னம் கண்டுபிடிக்கப்பட்டது!

கனடாவின் விமான வரலாற்றின் ஒரு சின்னம் லேக் ஒன்ராறியோவின் ஆழத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடரந்து மீட்பு குழு அலைகளின் அடியில் மேலும் பல இருக்கலாம் என நம்புகின்றனர். Avro Arrow என நம்பகூடிய மாதிரி ஒன்றை சுழிலோடிகள் கடந்த வாரம் பிரின்ஸ் எட்வேட் கவுன்ரியில் தரைக்கு கொண்டு வந்து பின்னர் கனடா விண்வெளி மற்றும் அருங்காட்சியகத்திற்கு செவ்வாய்கிழமை கொண்டு வந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மாதிரி தொடர்கள் பல லேக் ஒன்ராறியோவின் அடியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டன. கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட மாதரி கிட்டத்தட்ட மூன்று மீற்றர்கள் நீளம்-உண்மையான விமானம் ஒன்றின் 1/8 அளவு கொண்டது-என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய முக்கோண இறக்கைகள் கொண்ட ஒரு றொக்கெட் போன் தோற்றமுடையதென கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மாதிகள் பல 1954ற்கும் 1957-ற்கும் இடைப்பட்ட காலத்தில் லேக் ஒன்ராறியோவிற்கு மேலாக சோதனைக்காக விடபட்டன. Avro Arrow முதல் மற்றும் ஒரே ஒலியை விட விரைவாக செல்லும் உளவு விமானம் கனடாவில் செய்யப்பட்டதாகும். 1950ன் மத்திய பகுதியில் இந்த விமானங்கள் உருவாக்கப்பட்டன. சோவியத் குண்டு வீச்சாளர்கள் வட அமெரிக்காவை தாக்கும் பொருட்டு ஆர்டிக்கிற்கு மேலாக பறக்கும் போது பதிலளிக்க ஆக்கப்பட்டன.
1959ல் இந்த Arrow திட்டம் திடீரென இரத்து செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட ஆறு விமானங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டுமான பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும் நான்கு மாதிரிகள் லேக்கின் அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாகவும் அடுத்த கோடைகாலத்தில் இவைகளை மேலே கொண்டுவர திட்டமிட்டுள்ளதாககவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கனடிய மக்களின் மனதில் முன்னணி வகிக்கின்றது. வாழ்க்கை வரலாற்றில் இது மிக முக்கிய பகுதியாக அமைகின்றதென கூறப்படுகின்றது.