Canada

கனடாவில் ஆயுதம் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியர்? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் .

கனடாவில் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்தலில் இந்திய வம்சாவளி நபர் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கனடா நாட்டில் குடியிருந்து வருபவர் இந்தியா வம்சாவளி தொழிலதிபர் அல்தாப் நஷ்ரேலி. அவர், 2016-ம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றதில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில், `ஆன்லைன் விற்பனையாளர் பேட்ரிக் பைரைன், தன்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டீப்கேப்சர் (deepcature) இணையதளத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்தே தாம், போதைப்பொருள் கடத்துபவர், ஆயுதங்கள் கடத்துபவர் போன்று தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் செய்தி மார்க் மிட்சேல் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அந்த வெப்சைட்டுக்கு பைரேன்தான் உரிமையாளர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், அல்பாப் நஷ்ரேலிக்கு 1.2 மில்லியன் டொலர் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கனடா உச்ச நீதிமன்றத்தில் வெப்சைட் உரிமையாளர் பைரேன் வழக்கு தொடர்ந்தார். கடந்த வாரம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பைரேன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, கொலம்பியா நீதிமன்றத் தீர்ப்பை கனடா உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top