Canada

கனடாவில் இருந்து துரத்தப்பட்ட வெளிநாட்டவர்: விமான நிலையத்தில் இறந்த சோகம்!

கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளிநாட்டவர் ஒருவருக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். Calgary விமான நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. வெளிநாட்டவர் ஒருவர் கனடாவில் தங்கியிருந்த நிலையில் அவரை நாட்டிலிருந்து சில காரணங்களுக்காக வெளியேற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதன்படி Calgary சர்வதேச விமான நிலையத்துக்கு குறித்த நபர் அழைத்து வரப்பட்ட நிலையில் அங்குள்ள அதிகாரிகளுடன் சண்டை போட்டுள்ளார்.

இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் பெயர் மற்றும் இதர அடையாளங்கள் வெளியிடப்படாத நிலையில் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top