Canada

கனடாவில் தற்காலிக EpiPen!

ஒட்டாவா–உயிராபத்தான ஒவ்வாமை கொண்ட கனடியர்களிற்காக EpiPenற்கு மாற்றீடு ஒன்று அடுத்த மாதம் கிடைக்கும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் ஜினெட் பெற்றிபாஸ் யு.எஸ். அங்கீகாரம் பெற்ற Auvi-Q epinephrine தானாக செலுத்திகளை கனடாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதிப்பதற்கான ஒரு இடைக்கால ஒழுங்கில் கையெழுத்திட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

கடந்த பல மாதங்களாக கனடாவில் EpiPen மற்றும் EpiPen Jr. தானாக செலுத்திகளிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. Auvi-Q, Kaleo மருந்து கம்பனியால் தயாரிக்கப்பட்டு யு.எஸ்.உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினரால் ஏற்றுகொள்ளப்பட்டது. EpiPen மற்றும் Auvi-Q ஆகிய இரண்டும் ஒரே அளவு லேபலிடப்பட்ட எப்பி நெப்பிரின் இயக்குநீர் கொண்டது.

இருப்பினும் எபிபென் போலல்லாது Auvi-Q ஒரு உள்ளிழுக்கும் ஊசி மற்றும் ஒரு மின்னணு குரல் வழிமுறை அமைப்பையும் கொண்டது. Auvi-Q 0.3 செப்ரம்பர்-7 மருந்தகங்களில் பெறக்கூடியதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. Auvi-Q பிரெஞ்ச் பெயரகள் மற்றும் அறிவுறுத்தல்களை கொண்டிராது என கனடா சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top