கனடாவில் துப்பாக்கி சூடு , பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

கனடாவின் ரெக்ஸ்டேலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். மார்டின் கிரோவ் சாலை மற்றும் ஜான் கார்ட்லேண்ட் பவுல்வரில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் பொலிசார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொலிசார் வந்த போது துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து வீழ்ந்து கிடந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபர் தனது தோழியுடன் பிளாசாவுக்கு நடந்து சென்ற போது திடீரென காரில் வந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.