கனடா ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

கனடாவின் குபெக் நகர் பகுதியிலுள்ள ஆறொன்றில் முழ்கி சுற்றிலாப் பயணியொருவர் உயிரிழந்துள்ளார். ஆறு சுற்றுலாப் பயணிகளுடன் கனடாவின் குபெக் நகரின் மேற்குப் பகுதியிலுள்ள பெட்டிடீ நேஷன் ஆற்றிற்கு நீராடச் சென்ற மெக்சிகோ நாட்டு இளைஞர் (வயது-30) ஒருவரே நேற்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன், ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த வேளையில் பாறையில் மோதி ஆற்று நீருடன் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவருடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அவசர சேவையை அணுகிய வேளையில் தீயணைப்புப் படையினர் அவ்விடத்திற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், படையினர் இரண்டரை மணிநேரம் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு குறித்த இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.