கனடா நோர்த் யோர்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம் .

நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். லெஸ்லி ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூ பகுதியில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரும் அருகில் உள்ள பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக நடந்து சென்றதாகவும், பின்னர் ஒருவர் Tauma Centre மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் குறித்த சம்பவத்தின் போது, 20 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் கேட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் குறித்த பகுதியில் சேதமடைந்த மற்றும் குண்டு துளைகளுடன், வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த காலங்களில் ரொறன்ரோ உட்பட பல பகுதிகளில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசாங்கம் துப்பாக்கி பிரயோகங்களை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.