Canada

கனடா New Brunswick இல் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி! பொலிசார் எச்சரிக்கை !!

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். கனடாவின் New Brunswick பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனர்த்தம் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை ஏழு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் தற்போது இடம்பெற்று வருவதாகவும், அதனை முறியடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொது மக்களை அவ்விடத்தை விட்டு செல்லுமாறும், வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டி கொள்ளுமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடுவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top