Canada

கனடிய ராப் பாடகரின் விஜயத்தின் பின்னர் இருதயம் பெற்ற 11வயது பெண்!

கடுமையாக சுகயீனமுற்றிருந்த ஒரு ரேக்கின் விசிறி ராப் பாடகர் அவளது வைத்தியசாலைக்கு சென்றதால் அவளிற்கு புதிய இதயம் வழங்கப்பட்டுள்ளது. ஷோபியாவிற்கு இதய தசை நோய் ஏற்பட்டு நிலைமை இதய செயலிழப்பிற்கு இட்டு செல்லும் நிலையை கொண்டிருந்தது. இதிலிருந்து மீள்வதற்கு இவளிற்கு இதய மாற்று சத்திர சிகிச்சை தேவைப்பட்டது. சிக்காகோAnn & Robert H. Lurie Children’s வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள்.

வைத்தியசாலையில் காத்திருந்த சமயம் தனது பிறந்தநாளிற்கு இரண்டு விருப்பங்களை விரும்பினாள். ஒன்று புதிய இருதயம் கிடைக்க வேண்டும்-நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒன்று. அடுத்தது ராப் பாடகரான டிரேக்கை சந்திப்பது. டிரேக்கின் ஒரு பெரிய ரசிகையான இவள் அவரை சந்திக்க விரும்பினாள். தனது விருப்பத்தை வீடியோ மூலம் பதிவு செய்தாள். இதனை பார்த்த டிரேக் சிக்காகோ சென்று ஷோபியாவை சந்தித்துள்ளார்.

டிரேக்கை சந்தித்த ஒரு சில நாட்களில் சிக்காகோவின் புறநகர் பகுதி ஒன்றை சேர்ந்த இப்பெண்ணிற்கு இதய மாற்று சத்திரசிகிச்கை இடம்பெற்றது. இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கார்ள் பக்கர் 12-மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை இடம்பெற்றதாக தெரிவித்தார்.சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது இருப்பினும் 48-மணித்தியாலங்கள் கடினமானதென கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top