களைகட்டியுள்ள 51-வது ரொறொன்ரோ கரிபியன் திருவிழா!

கரிபிய கலாச்சாரத்தின் முழு காட்சியமைவுகளுடன் 51வது ரொறொன்ரோ கரிபியன் திருவிழா சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் மில்லயனிற்கும் மேலான மக்கள் நகரில் காட்சியளிக்கின்றனர்.
1967லிருந்து கரிபியன் திருவிழா நகரின் கோடைகால கொண்டாட்டங்களின் கிரீடமாக வளர்ந்து வருகின்றதுடன் எப்போதும் கண்கவர் காட்சிகள் மிக்க பிரமாண்டமான அணிவகுப்பாகவும் உச்சநிலையில் காணப்படுகின்றது.
வியாழக்கிழமை ஆரம்பமான திருவிழா ஆகஸ்ட் மாத நீண்ட வார இறுதி ஊடாக சிம்கோ தினம் வரை தொடரும். சிம்கோ தினம் பிரிட்டிஷ் கனடாவின் ஒரு பகுதியான Upper Canada வின் முதல் கவர்னர் ஜெனரல் ஜோன் கிரேவ்ஸ் சிம்கோவை-கனடாவில் அடிமைத்தனத்தை அகற்ற உதவியவருமான மனிதனை கௌரவப் படுத்தும் நாளாகும்.