கார் மோதி 15 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்: நெஞ்சை பதறவைக்கும் காட்சி!

இங்கிலாந்து சாலையியல் கத்தியுடன் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர் மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதி 15 அடி தூரத்திற்கு தூக்கி வீசும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் birmingham பகுதியில் Erdington அருகே உள்ள ஒரு தெருவில், கருப்பு வடிவிலான முகமூடி அணிந்திருந்த 4 இளைஞர்கள் கையில் கத்தியுடன் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது அதிவேகமாக அவர்களை துரத்தி கொண்டு வந்த கார், நான்காவதாக வந்துகொண்டிருந்த நபரை நெருங்கியதும் வேகமாக சென்று மோதி தூக்கி வீசுகிறது.விபத்து நடந்த இடத்திலிருந்து 15 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர், ஒரு அங்குலம் கூட நகர முடியாமல் பலத்த காயங்களுடன் அந்த இடத்திலே விழுந்து கிடக்கிறார்.
இதனையடுத்து அவருடன் ஓடி வந்த மற்ற நபர்கள் வேகமாக வந்து காயமடைந்தவரை தூக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் காயமடைந்த நபர் எந்தவிதமான அசைவும் இல்லாமல் இருந்ததால், அவரையே அந்த இடத்திலே விட்டுவிட்டு சாலையில் நின்றிருந்த மற்றொரு காரில் ஏறி தப்பிவிட்டனர். அதேசமயம் அங்கு வந்த பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், படுகாயங்களுடன் சாலையில் கிடந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், சம்மந்தப்பட்ட இளைஞர் 20 வயதுள்ளவர் எனவும், தலையில் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து எந்தவிதமான தகவலும் கிடைக்காததால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.