Canada

கிச்சினரில் வீடொன்று வெடித்து சிதறி பெண் மரணம்!

ஒன்ராறியோ-கிச்சினரில் வீடொன்று வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் இறந்துள்ளதுடன் மனிதன் ஒருவர் ஆபத்தான நிலையில் வான் வழியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

கிச்சினரில் ஸ்புறூஸ்டேல் கிரசென்டில் அமைந்துள்ள வீடொன்று வெடித்து சிதறி தரைமட்டமாகியுள்ளது. காலை 9-மணிக்கு சிறிது முன்னராக இடம்பெற்ற சிதறலினால் இடிபாட்டு குப்பைகள் ஏராளமான அயலவர்களின் பகுதிகளிற்குள் சிதறியுள்ளது.

சம்பவம் நடந்த சமயம் வீட்டிற்குள் 10-பேர்கள் வரை இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதறியதால் வீடு பூராகவும் சிதைந்து விட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இது தொடர்பாக மேலதிக விபரங்கள் குறித்து செய்தி மகாநாட்டில் தெரிவிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top