News

“குடும்ப ஆட்சி தழைத்தோங்கினால் நீதித்துறை கேலிக்கூத்தாக்கப்படும் ”

பொது எதிரணியினர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த பிரதான காரணம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தம் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கவே தவிர பொது நோக்கங்கள் ஏதும் கிடையாதென இளையோர் தொழில் நிபுண சங்கத்தின் தவிசாளர் சஜித கொடிதுவக்கு தெரிவித்தார்.

குடும்ப ஆட்சி மீண்டும் தழைத்தோங்கினால் தற்போது சுயாதீனமாக செயற்படுகின்ற நீதித்துறை வலுவிழந்து கேலிக்கூத்தாக்கப்படும்.

மஹிந்த ராஜபக்ஷவின் குடுமபத்தாரின் கூட்டு தேசிய நிதி மோசடி தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுக்கள் இன்று பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றது .

தேசிய அரசாங்கம் பயனற்றது என்று குறிப்பிட்டுக் கொண்டு பொது எதிரணியினர் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர். 3 வருட குறுகிய காலத்திற்குள் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி பணிகளையும், பல முக்கிய தாபனங்களையும் சுயாதீனமாக ஸ்தாபித்துள்ளது. நிலையான அபிவிருத்தி பணிகளை மாத்திரமே அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது கடந்த அரசாங்கத்தினை போன் று காட்டு விலங்குகள் உலாவுவதற்கு நாட்டை கடன் பொறிக்குள் தள்ளும் அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை.

குடும் ப ஆட்சியினை வீழ்த்தி தேசிய அரசாங்கத்தை மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களின் மத்தியில் தோற்றுவித்தனர். அரசாங்கத்தின் நோக்கம் முழுமையடைவதற்கு பல காரணங்கள் தடையாக காணப்பட்டது. இருப்பினும் அரசாங்கம் பல சாவால்களை எதிர்கொண்டு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான விவாதத்தின் போது எதிராக வாக்களித்தவர்கள் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானவர்களாகவே கருதப்படுவார்கள் . பழைய தேர்தல் முறைமையின் ஊடாக கடந்த காலங்களில் பாராளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளாக தகுதியற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கம் புதிய தேர்தல் முறைமையினை காலமாற்றத்திற்கு அமைய கொண்டு வந்தது. புதிய தேர்தல் முறைமைய மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற அன் று ஆதரவு வழங்கியவர்கள் இன் று தமது சுய அரசியல் இலாபங்களுக்காக எதிர்க்கின்றார்கள் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top