News

கோட்டாபய ராஜபக்‌ஷே உள்ளிட்ட 4 பேருக்கு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும்பொருட்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 4 பேருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே இவ்வாறு அறிவித்தல் விடுத்துள்ளது.

கோட்டபாய ராஜபக்ஸ தவிர, சஜின் வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்ரசேன ஆகியோருக்கும் இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்வரும் 29ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top