சட்ட விரோத மரியுவானாவிற்கு கனடியர் செலவழித்த தொகை 6-பில்லியன் டொலர்கள்!

இந்த வருடம் சட்ட விரோத மரியுவானாவிற்கு கனடியர் செலவழித்த தொகை 6பில்லியன் டொலர்கள். ஏப்பரல் மற்றும் யூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கனடிய மக்கள் 5.7பில்லியன் டொலர்களை மரியுவானவிற்கு செலவழித்துள்ளனரென கனடா புள்ளிவிபரவியல் தெரிவித்துள்ளது. இவற்றில் சட்ட பூர்வமான மற்றும் சட்ட விரோத வகைகள் இரண்டும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் சட்டவிரோத விற்பனை 85சதவிகிதம் அல்லது 4.8பில்லியன் டொலர்கள் செலவென தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொகை சட்டபூர்வ மருத்து மருந்து சீட்டுக்கள் மூலம் பெறப்பட்டவையாகும். அக்டோபர் 17முதல் மத்திய அரசாங்கம் பொழுது போக்கிற்காக மருந்தை சட்ட பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது. கனடியர்கள் மத்தியில் மரியுவானாவின் மருத்துவ மற்றும் பொழுது போக்கு பாவனைகள் அதிகரித்துவருகின்றன.
2016லிருந்து கனபிசின் மருத்துவ பாவனை மும்மடங்காக அதிகரித்துள்ளதெனவும் கனடா புள்ளிவிபரவியல் தெரிவிக்கின்றது. மருந்துகளின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவது போன்று தோன்றுகின்றது. கனடா பூராகவும் சராசரி கிராம் ஒன்றின் விலை இரண்டாவது காலாண்டில் டொலர்கள் 6.74. இந்த கணிப்பு கடந்த 10ஆண்டுகளில் 10சதவிகிதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.