சமீபத்திய வரலாற்றில் கனடாவின் மிகப்பெரிய மனித படுகொலைகள்!

கடந்த வெள்ளிக்கிழமை கனடாவின் கிழக்கு பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாட்டில் இடம்பெற்ற கடைசி துப்பாக்கி வன்முறையாகும். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ஆயுதங்களிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளில் கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி வன்முறைகள்:
ரொறொன்ரோ ஒன்ராறியோ: யூலை22 2018-மனிதன் ஒருவன் பரபரப்பான ரொறொன்ரோ வீதியில் நடந்து சென்று உணவகம் ஒன்றிற்குள் துப்பாக்கி பிரயோகம் செய்தான். இருவர் கொல்லப்பட்டதுடன் 13பேர்கள் காயமடைந்ததுடன் தன்னை தானே சுட்டு கொண்டான்.
கியுபெக் சிற்றி கியுபெக்: ஜனவரி 29 2017
கியுபெக் பள்ளிவாசல் ஒன்றில் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கையில் துப்பாக்கிதாரி ஒருவன் நுழைந்து ஆறு பேர்களை கொன்றதுடன் ஐவர் காயமடைந்தனர். 12பேர்களிற்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது.
LA LOCHE-சஸ்கற்சுவான்:ஜனவரி 22 2016:
மாணவன் ஒருவன் தனது வீட்டில் சகோதரர்கள் இருவரை கொன்று பின்னர் ஒதுக்கமாய் அமைந்துள்ள சமுதாய உயர் தர பாடசாலையில் மேலும் இருவரை கொன்றதுடன் ஏழு பேர்கள் காயமடைந்தனர்.
எடமன்டன் அல்பேர்ட்டா: டிசம்பர் 29 2014:
மனிதன் ஒருவன் தனது மனைவி உட்பட எட்டு பேர்களை கொன்று தன்னை தானே கொன்றுள்ளான்.
மொன்க்டொன்-நியு பிறவுன்ஸ்விக்: யூன் 2014:
துப்பாக்கிதாரி ஒருவன் மூன்று ஆர்சிஎம்பி அதிகாரிகளை கொன்றதுடன் இருவரை காயப்படுத்தினான்.
ரொறொன்ரோ ஒன்ராறியோ: யூலை 2012-
இரண்டு கும்பல் அங்கத்தவர்கள் வெஸ்ட் ஹில்லில் நடந்த பார்ட்டி ஒன்றில் இருவரை கொன்று 23-பேர்களை காயமடைய செய்தனர்.
மொன்றியல் கியுபெக்:
செப்ரம்பர் 2006-டாவ்சன் கல்லூரியில் துப்பாக்கி பிரயோகம் செய்த மனிதன் ஒருவன் மாணவன் ஒருவனை கொன்று 19பேர்களை காயமடைய செய்தபின்னர் தன்னை தானே சுட்டு கொன்றான்.
அல்பேர்ட்டா-மேயர்ட்ரோப்: மார்ச் 2005:
சொத்துக்களை மீட்டெடுக்கும் உத்தரவாதத்தை நிறைவேற்ற சென்ற நான்கு ஆர்சிஎம்பி அதிகாரிகளை கொன்று தன்னையும் கொன்றுள்ளான்.
ஒட்டாவா ஒன்ராறியோ ஏப்ரல்1999-
ஒட்டாவா நகர்ப்புற போக்குவரத்து சேவை ஊழியர் தனது சக ஊழியர்கள் நால்வரை கொன்று மற்றும் இருவரை காயப்படுத்திய பின்னர் தன்னைத்தானே சுட்டு கொன்றுள்ளான்.
வேநொன் பிரிட்டிஷ் கொலம்பியா:
ஏப்ரல்1996-மனிதன் ஒருவன் அவனது மனைவியின் சகோதரியின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களில் ஒன்பது பேர்களை கொன்றதுடன் இருவரை காயப்படுத்தி தன்னையும் கொன்றுள்ளான்.
மொன்றியல் கியுபெக்: ஆகஸ்ட் 1992-கொன்கோடியா பல்கலைக்கழக இணை விரிவுரையாளர் ஒருவர் தனது சக விரிவுரையாளர்கள் நால்வரை கொன்றதுடன் ஒருவரை காயப்படுத்;தியுள்ளார்.
மொன்றியல் கியுபெக்-டிசம்பர் 1989-
கனடாவின் மிக கொடுமையான பாடசாலை சூட்டு சம்பவம். துப்பாக்கிதாரி 14மாணவர்களை-அனைவரும் பெண்கள்-சுட்டு கொன்றதுடன் 13 பேர்களை காயப்படுத்தினான். Ecole Polytechnique கல்லூரியில் இடம்பெற்ற சம்பவம்.இறுதியில் கொலையாளி தற்கொலை செய்து கொண்டான்.