சவுதி அரேபியாவால் நிராகரிக்கப்பட்ட நோவ ஸ்கோசிய மேப்பிள் சிரப் உலகம் பூராகவும்!

இது சங்கடமான சூழ்நிலைக்கு ஒரு இனிப்பான தீர்வு என கருதப்படுகின்றது. நோவ ஸ்கோசியாவை சேர்ந்த அனா ஹச்சின்சன் 900லிட்டர்கள் மேப்பிள் சிரப்பை விற்க இடமில்லாமல் திண்டாடினார். நோவ ஸ்கோசியா, லேக் போல் என்ற இடத்தில் அமைந்துள்ள தனது ஹச்சின்சன் ஏக்கர்சிலிருந்து 900லிட்டர் போத்தல்கள் மேப்பிள் சிரப்பை-சவுதி அரேபிய மொழியில் தயாரிக்கப்பட்டு சவுதி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது-அனுப்ப சில நாட்கள் இருந்த நிலையில் இரு நாடுகளிற்கும் இடையிலான தற்போதய இராஜதந்திர சிக்கல்கள் காரணமக இவரது சவுதி கொள்முதலாளர் வாங்க முடியாதென அறிவித்து விட்டார்.
சவுதியில் சந்தைப்படுத்த கூடிய வகையில் விசேடமாக லேபல்களிடப்பட்ட சிரப்பை வேறெந்த கடைகளிலும் வைக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார் ஹச்சின்சன். ;இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கனடியர்கள்-மற்றும் உலகம் பூராகவும் உள்ள மேப்பிள் சிரப் விசிறிகள் ஹச்சின்சனிற்கு உதவ முன்வந்தனர். தொலைபேசி அழைப்புக்களும் மின்அஞ்சல் தகவல்களும் குவியத்தொடங்கின.
கடந்த ஞாயிற்றுகிழமை காலை அனைத்து 900லிட்டர் போத்தல்களும் விற்பனையாகி விட்டன. கனடாவின் ஒரு சிறிய வணிகத்திற்கு அகில உலகமே ஆதரவு வழங்கியது. கடந்த சில நாட்களாக விற்பனையான தொகை போத்தல்களிற்கும் மேலான தொகைக்கு ஆர்டர்கள் குவிந்த வண்ணமாக இருப்பதாக இவர் தெரிவித்தார். எதிர்வரும் கிறிஸ்மஸ் தின அன்பளிப்பாக கொடுப்பதற்கு 100போத்தல்களை வாங்குவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக கூறினார். ஐக்கிய அரபு நாடுகள், சீனா, இந்தியா, ஜோர்டான் மற்றும் கோஸ்ர றிக்கா போன்ற நாடுகளிற்கும் இவர் தனது மேப்பிள் சிரப்பை அனுப்பி உள்ளார்.