News

சிரியா ஆயுத கிடங்கில் பயங்கர வெடி விபத்து – 39 பேர் உயிரிழப்பு!

சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயுத கிடங்கில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
இந்த மாகாணத்தின் பல பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் துருக்கி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள சர்மாடா நகரில் உள்ள அரசு ஆயுத கிடங்கில் இன்று பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது.

அதிர்ச்சியில் அருகாமையில் உள்ள இரு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய மக்களை புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் ராணுவத்தினர் மீட்டனர். எனினும், 39 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 50 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அங்குள்ள போர் நிலவரங்களை பார்வையிடும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இது விபத்தா? அல்லது வன்முறை தாக்குதலா? என்பது தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top