Canada

சிரிய அகதிகளிற்கு தனது வீட்டை கொடுத்த ஒன்ராறியோ மேயர்!

ஒன்ராறியோவின் சிறிய ரவுன் ஒன்றின் மேயர் கிட்டத்தட்ட ஆறு மாதங்களிற்கு தனது வீட்டை ஐவர் அடங்கிய சிரிய அகதிகள் குடும்பம் ஒன்றிற்கு கொடுத்துள்ளார். ஒன்ராறியோ வடக்கில், டன்டாஸ் வடக்கு மேயர் எரிக் டன்கன் என்பவர். ஒட்டாவா மேற்கிலிருந்து கிட்டத்தட்ட 50-கிலோ மீற்றர்கள் தொலைவில் 2,400மக்களை கொண்ட பகுதியாகும். குறிப்பிட்ட குடும்பம் கனடாவில் வாழ்வதற்கு ஒரு சுமுகமான பரிமாற்றம் தேவை என மேயர் விரும்பினார்.

அதனால் மேயர், தனி ஆளாக இருக்கும் தான் அருகாமையில் இருக்கும் தனது தாயாருடன் இருக்கலாம் என எண்ணி தனது வீட்டை சிரிய குடும்பத்தினருக்கு கொடுத்து அவர்கள் கனடாவில் குடியேற தங்களை தயார் படுத்திய பின்னர் எங்கு செல்லாம் என தீர்மானிக்கலாம் என தெரிவித்தார். இப்பெற்றோர்களான அல் டானியா மௌசீன் மற்றும் அடெல் ஹொரானி தங்கள் மூன்று பிள்ளைகளுடன் மேயரின் வீட்டில் தங்கி தங்கள் சொந்த கடை ஒன்றை ஆரம்பிக்க பணத்தை சேகரித்தனர்.

ஐந்து மாதங்கள் மேயரின் வீட்டில் தங்கிய குடும்பம் பின்னர் தங்கள் சொந்த வாடகை குடியிருப்பு ஒன்றிற்கு குடி பெயர்ந்தனர். அப்பகுதி மக்கள் முன்வந்து தளபாடங்கள் தேவையானவற்றறை நன்கொடையாக வழங்கினர். கனடியர்களின் தயாள குணம் அத்தம்பதியினரை வியக்க வைத்ததென தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top