News

சிவாஜிலிங்கம் என்னை ஒன்றும் செய்யமாட்டார் ; ஐனாதிபதி.

மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனாலேயே சிவாஜிலிங்கத்துடன் சென்று பேசினேன் என ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அண்மையில் நான் யாழ்ப்பாணம் வந்தபோது சிவாஜிலிங்கம் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார்.

நான் உடனேயே எனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று எதற்காக போராடுகிறீர்கள்? என சிவாஜிலிங்கத்திடம் கேட்டேன். இதற்கு பின் எனது நண்பர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவ்வாறு செய்யவேண்டாம் என கூறினார்கள். ஆனால் சிவாஜிலிங்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் தனது மக்களுக்காக போராடுகிறார்.

அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என எனக்கு நம்பிக்கையுள்ளது. இன்றைய நிகழ்வுக்கும் அவர் வந்திருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி என ஐனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top