News

சுதந்திரக்கட்சியின் அதிருப்தியாளர்களிற்கு எதிராக நடவடிக்கை- மகிந்த சமரசிங்க.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 அதிருப்தியாளர்களிற்கும் எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

16 அதிருப்தியாளர்களும் கட்சிக்கு எதிராக தொடர்ந்தும் சதி முயற்சியில் ஈடுபட்டால் கட்சியின் மத்திய குழு ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டிற்கு முன்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர 16 பேர் கொண்ட குழுவினருடன் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை முன்னாள் பிரதிசபாநாயகர் திலங்க சுமதிபால முன்னாள் ஜனாதிபதியுடன் நெருக்கமாக உள்ளார், எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் பலர் இந்த குழுவிற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிலர் இரு தரப்பிலும் கால்வைத்துள்ளனர் அவர்கள் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை குற்றம்சாட்டுவதுடன் அவர்கள் முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவர முயல்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்

.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் இதனை இதற்குமேலும் சகித்துக்கொண்டிருக்க முடியாது இதனால் மத்திய குழு துரோகிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என நான் கருதுகின்றேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top