News

சுவிஸில் வீதிக்கு வந்த தமிழ் குடும்ப சண்டை.. பொலிஸ் குவிப்பு: பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திரளான பொலிசாரும் மீட்பு குழுவினரும் திடீரென்று குவிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை அடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதில் ஒரு இளம் பெண் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே அப்பகுதியில் குவிந்த மக்கள் மீதும் அடிதடி நடத்தப்பட்டுள்ளதால் பொலிஸார் ஒருகட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி, பின்னர் ரப்பர் குண்டுகளையும் அங்கு கூடிய பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளனர்.

சிட்டி சென்டர் அருகே பொலிஸ் குவிக்கப்பட்டதற்கும் குவிந்த பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கும் பொலிசார் இதுவரை விளக்கமளிக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் சூரிச் அறோ பகுதியில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையால் குடும்பத்தில் இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியதாகவும் மேலும் குடும்ப உறுப்பினர் அடி காயங்களுக்கு உள்ளாகியதாகவும் இதனைத் தடுக்க வந்த சுவிஸ் பிரஜை ஒருவரையும் தாக்கியதாலும் மேலும் குடும்பக் கலவரம் வீதிக்கு வந்ததாலும் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top