ஜேர்மனில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய நபர் கைது !

ஜேர்மனில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான இவர் இஸ்லாமிய நபர் ஆவார். ரஷ்ய குடிமகனான இந்நபர் பெர்லினில் வசித்து வந்தார்.
இஸ்லாம் மதத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட இவர், இஸ்லாமிய நாடு உருவாக வேண்டும் என்பதற்காக ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கடந்த ஆண்டு தீவிரவாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெர்லின் மாநிலத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபட தீவிரமாக திட்டமிடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது