ஜேர்மனி விமான நிலையத்தில் அவசர அவசரமாக பயணிகளை வெளியேற்றிய பொலிசார்! காரணம் என்ன?

ஜேர்மனியின் Frankfurt விமான நிலையத்தின் முனையத்தில் இருந்து, பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி நாட்டின் Frankfurt விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதியில் இருந்து மர்ம நபர் ஒருவர், பொலிசாருக்கு தெரியாமல் வெளியேறியதாக தகவல் ஒன்று வெளியானது. இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், Frankfurt விமான நிலையத்தின் ஒரு முனைய பகுதியில் இருந்து பயணிகளை அவசரமாக வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பாக பெடரல் பொலிசார் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,
‘Frankfurt விமான நிலையத்தின் முனையம் 1-ன் A பகுதியில் பொலிசார் தலையீடு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் Level 2, Level 3 பாதுகாப்பு பகுதிகளில் அப்புறப்படுத்தும் பணியும், போஃர்டிங்கை நிறுத்தும் பணியும் நடந்து வருகிறது. இதுதொடர்பான தகவல்கள் மேலும் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.