தமிழரின் நில அபகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் கண்டனப்போராட்டம்.

திட்டமிடப்பட்ட வகையில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்துவதற்கான கண்டன போராட்டம்எதிர்வரும் 28 ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தினூடாக தமிழர்களின் பூர்வீக நிலங்கள் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சிங்கள குடியேற்றம்,தமிழர் கலாச்சாரங்களை அழிக்கும் வேலைத்திட்டங்கள்,தமிழர்களை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.
இதை கட்டுப்படுத்தாமல் விட்டால் வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இது தொடரும் அபாயம் உள்ளது.இந்த அரசாங்கம் நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழர்களின் கலாசாரம்,பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாட்டை தொடர்ந்தவண்ணமுள்ளது.எமது பூர்வீக நிலங்களை சிங்கள தேசமாகுவதற்க்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி,பிரதேச வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் எதிவரும் 28.08.2018 ஆம் திகதி ஓரணியில் எமது பூர்வீக நிலங்களை காக்க ஒன்றுபடுவோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு PWD சந்தியில் இருந்து முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பேரணி மாவட்ட செயலகம் வரை நடைபெறவுள்ளது.