தற்கொலைக்கு முயன்ற இளைஞர்: சாமர்த்தியமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர் !

கனடாவில் தற்கொலை செய்துகொள்வதாக தண்டவாளத்தில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்து காப்பாற்றியுள்ள ரயில்வே ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கனடாவில் உள்ள Dundas ரயில்வே நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் J.P Attard. தண்டவாளத்தில் 20 வயதுள்ள இளைஞர் ஒருவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் Attard, உடனடியாக மின் இணைப்பை துண்டிக்குமாறு சக ஊழியர்களிடம் கூறிவிட்டு, அந்த இளைஞரை நோக்கி சென்று பேச்சு வார்த்தை கொடுத்து காப்பாற்றினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய Attard, நான் அந்த இளைஞரின் அருகில் சென்றதும் இன்றைய நாள் உனக்கு கெட்டதா என கேட்டேன். ஆம் என்னை காயப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என அந்த இளைஞன் பதிலளித்தான்.
இதனைத் தொடர்ந்து அவனை சமாதானப்படுத்த முயன்ற Attard, அவனை கட்டி தழுவியவாறே உன்னுடைய எதிர்மறை நிகழ்வுகளை நேர்மறையாக பார் என அறிவுரை வழங்க, அதனை ஏற்றுக்கொண்ட இளைஞனும், நான் உறுதியானவன் என சத்தமாக பதிலளித்தான்.
இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பலரும் உற்சாகத்துடன் கைதட்டி, Attard-ஐ வாழ்த்தினர்.