India

திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த கோர விபத்து: 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமண விழாவிற்கு சென்ற கார் மீது லொறி மோதிய கோர விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பேனுகொண்டா மாவட்டத்திலுள்ள தர்மவரம் பகுதியில் நடைபெறும் திருமண விழாவிற்கு, கார் ஒன்றில் 12 பேர் பயணம் செய்துள்ளனர். கார் சத்தாருபள்ளி என்னும் இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த சிறிய லொறி ஒன்று பலமாக மோதியது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரணமடைந்தவர்கள் குறித்த விபரம் எதுவும் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top