துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை!

கனடாவின் – நியு பிறவுன்ஸ்விக் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளினதும் இறுதிச் சடங்கு நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் புடை சூழ வெரெடிரெக்ரன் அற்கென் பல்கலைக்கழக மையத்தில் படை அணிவகுப்பு சார்ந்த இறுதி சடங்கே நேற்று இடம்பெற்றுள்ளது.
கனடாவின் – நியு பிறவுன்ஸ்விக் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 45வயதான கான்ஸ்டபிள் றொப் கொஸ்ரெலோ மற்றும் சாரா பேர்ன்ஸ் 43வயதான இரண்டு பொலிஸ் அதிகாரிகளே உயிரிழந்திருந்தனர்.
இறுதி சடங்கில் கலந்து கொள்ள மறைந்த அதிகாரிகளின் குடும்பம், விரெடெரிக்டன் பொலிஸ் மற்றும் சட்ட அமுலாக்க பணியாளர்களிற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விரெடெரிக்டன் பொலிஸ் படை, கனடா பூராகவும் உள்ள ஆர்சிஎம்பி மற்றும் முகமைகள் இறுதி சடங்கில் கலந்து கொண்டிருந்தனர்.