News

துப்பாக்கியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த மர்மநபர்: சுற்றி வளைத்த அதிரடிப்படை !

பிரான்ஸில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரான்ஸின் Emile-Lemoine Quimper பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தின் வழியாக, மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, RAID அதிரடிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்த அவர்கள், குடியிருப்பு வாசிகள் பலரை உடனடியாக வெளியேற்றினர். பின்னர் மர்மநபரை தேடும் பணி தொடங்கியது. நண்பகல் வேளையில் ஆரம்பித்த இந்த தேடுதல் பணி, இரவு 9.30 வரை நீடித்தது. குடியிருப்பு வாசிகள் தங்களது வீட்டிற்கு செல்ல முடியாமல் வீதிகளில் நின்றிருந்தனர். அவர்களுக்கு தீயணைப்பு படையினர் போர்வைகளை வழங்கினர். ஆனால், மர்ம நபரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த நகர மேயர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்தார். அதன் பின்னர், குடியிருப்பு வாசிகள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த தேடுதல் வேட்டை 8 மணிநேரத்திற்கு மேலாக நடந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top