Canada

நஃப்டா வர்த்தக பேர்ச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

நஃப்டா வர்த்தக ஒப்பந்தத்தினை புதுப்பிக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள கனடா தயாராகவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவின் ரொறொன்ரோ நகரில் இடம்பெற்ற ப்ரைட் வோக் (Pride Walk) என அழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் மாற்றுப்பாலினத்தோர்களுக்கான அணிவகுப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கனேடிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மெக்சிகோவில் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து மெக்சிகோ, அமெரிக்கா நாட்டுத் தலைவர்களின் வர்த்தக செயற்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகின்றோம். அத்துடன் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கான மீள் பேச்சுவார்த்தை தொடங்குமிடத்து அதில் உடனடியாக பங்குகொள்ள கனடா தயாராகவுள்ளது. அத்துடன் அண்மைக் காலமாக இளைஞர்களின் தற்கொலை வீதம் அதிகரித்துவருவதற்கு முக்கிய காரணம் மக்களிடையே ஓரினக் கவர்ச்சி மற்றும் மாற்றுப் பால் பற்றிய அறிவின்மையே ஆகும். இந்நிலையில், இவ்வாறான அணிவகுப்புகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமையும்” என்றும் குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top