News

நல்லாட்சி அரசாங்கத்திலும் விரிசலை ஏற்படுத்துமா? அமைச்சரவை கூட்டம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நடைபெறவுள்ள வாராந்த அமைச்சரவை கூட்டம் முக்கியமான கூட்டமாக அமையபெறவுள்ளது.

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அபிவிருத்தி உபாய மார்க்கங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் சமர்ப்பித்திருந்த பிரேரணைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார்.இந்நிலையில் மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் குறித்த இரு பிரேரணைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதன்போது ஜனாதிபதி குறித்த பிரேரணைகளை நிராகரிப்பாராயின், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு நல்லாட்சி அரசாங்கத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்துமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கம்பெரலிய கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் இரண்டு இலட்சம் ரூபாய் விசேட கொடுப்பனவை சிபாரிசு செய்திருந்தார். இதேபோன்று அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அமைச்சுகள் தனியார் சட்ட ஆலோசனைகளை பெறுவதற்கான ஆலோசனைகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top