நான்கு உறுப்புகள் நீக்கிய பின்னரும் சாதனை படைக்க விரும்பும் பெண்!

கல்கரி- இரண்டு வருடங்கள் நான்கு உடலுறுப்புக்கள் நீக்கத்திற்கு ஆளான கல்கரியை சேர்ந்த பெண் ஒருவர் தனது பார்வையை மரதன் ஓட்டத்தின் பக்கம் செலுத்தியுள்ளார். 2017-ல் வேர்னா மார்ஷோ என்ற பெண்ணிற்கு இடமகல் கருப்பை அகப்படலம்- அடிக்கடி வலி தரக்கூடிய நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்நோயினால் இவரது கருப்பை நீக்கப்பட்டது. இதன் பின்னர் மார்ஷோவிற்கு சிக்கல்களும் சீழ்பிடித்தலும் ஆரம்பமானது.
கடுமையான நோய் முன்கணிப்புடன் வைத்தியர்கள் இவரை கோமா நிலையில் வைத்தனர். கோமாவில் குறைந்தது ஒரு மாதம் இருப்பார் என வைத்தியர்கள் தெரிவித்த போதும் ஆறு நாட்களின் பின்னர் தான் எழுந்து விட்டதாக மார்ஷோ தெரிவித்தார். எழுந்ததும் தன்னை காப்பாற்றுவதற்காக தனது கால்களும் கைகளும் துண்டிக்கப்பட்டதை அறிந்தார். இந்நிலையில் இவர் நம்பிக்கை இழக்கவில்லை.
மார்ஷோவின் முதல் சவால் எவ்வாறு தனது புதிய செயற்கை கால்களுடன் நடக்க கற்பது என்பதாகும். கடுமையாக பயிற்சி செய்தார். இவருக்கு கை ஒன்றும் செயற்கையானது. நடனமாடவும் செய்தார். கடந்த யூலை மாதம் மார்ஷோ ஒரு ஐந்து-கிலோமீற்றர் ஒட்டத்திலும் பங்கு கொண்டார். வாழ்க்கையில் இவரது உறுதிப்பாடு இவரை திடமாக்கியது. மார்ஷோ கடுமையான வெளிக்கள செயற்பாடுகளிலும்-மலை ஏறுதல் சைக்கிள் ஓடுதல் போன்றனவற்றை செய்வதிலும் சிகிச்சைக்கு முன்னர் ஆர்வம் காட்டியவர். தற்சமயம் ஒரு பூரண மரதனில் ஓட முடியும் என நம்புகின்றார்.