நெடுஞ்சாலை 404ல் தவறான-பாதை விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்!

நெடுஞ்சாலை 404-ல் இடம்பெற்ற ஒரு தவறான-பாதை விபத்தில் 64வயதுடைய மனிதன் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை அதிகாலை விபத்து நடந்துள்ளது. நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதைகளில் எல்கின் மில்ஸ் வீதிக்கருகாமையில் நடந்துள்ளது.
64-வயதுடைய ரொறொன்ரோவை சேர்ந்த மனிதர் ஒருவர் நெடுஞ்சாலையில் வடபகுதி பாதைகளில் தெற்கு நோக்கி சென்று கொண்டிருக்கையில் வாகனம் ஒன்றின் முன்பக்கத்தில் அடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றய வாகனத்தின் சாரதியான 22-வயது ஆண் கடுமையான காயங்களால் அவதிப்பட்டு தற்சமயம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். புலன்விசாரனை நிமித்தம் நெடுஞ்சாலை பல மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தது.