Canada

நேற்று நள்ளிரவில் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய இரு சிறுமிகள்?

கனடாவிலிருந்து இரண்டு சிறுமிகள் நேற்று நள்ளிரவு நேரத்தில் லண்டனுக்கு பயணிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவில் இரண்டு சிறுமிகள் இரவு உடையில் வீட்டுக்கு தெரியாமல் கையில் ஒரு மேப்புடன் பேருந்தில் ஏறியுள்ளனர். 10 மற்றும் 12 வயதுடைய அந்த சிறுமிகளின் கைகளில் இருந்த, கையால் வரையப்பட்ட வரைபடத்தில் லண்டனுக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நள்ளிரவில் பேருந்தில் அவர்கள் ஏறியதைக் கண்ட பேருந்தின் சாரதி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த Metro Vancouver போக்குவரத்து பொலிசார் அந்த சிறுமிகளை விசாரணைக்கு உட்படுத்திய போது த்ரில்லுக்காக ஊர் சுற்ற அவர்கள் முடிவு செய்தது தெரிய வந்துள்ளது. அத்துடன், அவர்களின் மேப்பில் குறிப்பிட்டிருந்தது இங்கிலாந்திலுள்ள லண்டன் அல்ல, அது கனடாவின் பிரபல லண்டன் மருந்து கடை என்பது தெரிய வந்துள்ளது

எனினும், அவர்கள் எதற்காக மருந்து கடைக்கு போக முடிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை. குறித்த பேருந்தின் சாரதி பொலிசாருக்கு தகவல் கொடுத்ததால் அந்த சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top