News

நோபல் பரிசு பெற்ற ஐ.நா.சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில் 8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.

“ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக” கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.

பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 முதல் 31-8 -2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான்(80) உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

 

இரு இனப்படுகொலைகளை சந்தித்த கோபி அனான்

மேற்கு ஆபிரிக்க பாடசாலை ஒன்றிலேயே கோபி அனான் தனது வாழ்க்கையின் முக்கிய பாடத்தை கற்றார்

உலகில் எந்த பகுதியில் மக்கள் துயரத்தில் சிக்கினாலும் அது முழு உலகினதும் அக்கறைக்கும் உரிய விடயம் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம் என அவர் பின்னர் தெரிவித்தார்.

அந்த சிந்தனை அனானிற்கு வாழ்க்கை முழுவதும் வழிகாட்டியது, இதன் காரணமாகவே அவர் தனது வாழ்நாளின் போது உலகம் சந்தித்த முக்கிய நெருக்கடிகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

எச்ஐவிக்கு எதிரான போராட்டம்,ஈராக் யுத்தம், காலநிலை மாற்றம் சிரியாவின் உள்நாட்டு யுத்தம் என அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத விடயமேயில்லை எனலாம்.

அவரது மனிதாபிமான பணிகள் அவரிற்கு நோபல் பரிசையும் பெற்றுக்கொடுத்தன- கூடவே விமர்சனங்களும் எழுந்தன.

 

மாறும் காலங்கள்

கோபி அட்டா அனானும்,அவரது சகோதரி எவுவா அனானும் குமாசி நகரில் பிறந்தவர்கள்- இரட்டையர்கள்

அனான் செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்,அவரது குடும்பத்தவர்கள் பாராம்பரியமாக சமூகத்தின் உயர் பதவிகளை வகித்தவர்கள் தந்தை மாகாண ஆளுநர்

அனானிற்கு பத்தொன்பது வயதாவதற்கு இரண்டு நாட்களிற்கு அவரது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது- ஹானா என அது மாறியது.

நான் மாற்றங்கள் சாத்தியம் என கருதிய இளைஞன்,தீவிர புரட்சிகர மாற்றங்கள் கூட சாத்தியம் என அவ்வேளை கருதினேன் என அனான் ஒரு முறை கனடா இராஜதந்திரிகளிடம் தெரிவித்திருந்தார்.

ஹானாவிலும் அமெரிக்காவிலும் கல்விகற்ற அனான் ஐநாவில் பணியாற்ற ஆரம்பித்தார்.

அவர் தனது பணியை உலக சுகாதார ஸ்தாபனத்திலேயே ஆரம்பித்தார்- அங்கிருந்தே அவர் உலகின் தலைசிறந்த இராஜதந்திரி என்பதை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்.

ஆனால் அக்காலப்பகுதியில் அவர் தன்வாழ்நாளின் மிக மோசமான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டார்.

 

இனப்படுகொலை

1993 ம் ஆண்டளவில் அனான் ஐநாவின் பிரதி செயலாளர் நாயகம் என்ற முக்கியமான பொறுப்பு வரை பயணித்திருந்தார்.அமைதிப்படையின் தலைவராக விளங்கினார்.

1994 ம் ஆண்டு உலகத்தை உலுக்கிய அந்த இனப்படுகொலை இடம்பெற்றது.

100 நாட்களில் ருவான்டாவில் 800.000 டுட்சி இனத்தவர்களும்,மிதவாத ஹ_ட்டுகளும் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் 1995 இல் உலகம் மீண்டும் மற்றொரு இனப்படுகொலையை சந்தித்தது.

பொஸ்னியாவில் ஐநாவின் பாதுகாப்பான இடம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் 8000 முஸ்லீம்கள் சேர்பிய படைகளால் கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரு இனப்படுகொலைகளுக்காகவும் அனானும் அவரது அலுவலகமும் கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உருவானது.

ருவான்டாவில் இனப்படுகொலைகள் இடம்பெறலாம் என முன்கூட்டியே கிடைத்த தகவல்களை அனானின் அலுவலகம் அலட்சியம் செய்தது என வெளியான தகவல்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

ருவான்டா படுகொலையின் பத்தாவது வருடம் நினைவுகூறப்பட்டவேளை அனான் தான் எதிர்கொண்ட நெருக்கடியை ஏற்றுக்கொண்டார்.

ருவான்டா படுகொலைகள் இடம்பெற்றவேளை நான் ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் தலைவராக பணியாற்றினேன்,பலநாடுகளிடமிருந்து இராணுவத்தை கோரினேன்,என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அந்த இனப்படுகொலை முடிந்த பின்னரே நான் இன்னமும் அதிகளவிற்கு திறமையாக பணியாற்றியிருக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன்,நான் எச்சரிக்கை விடுத்து ஆதரவை பெற்றிருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ருவான்டாவில் கிடைத்த வேதனை மிகுந்த நிகழ்வுகளும் பொஸ்சினியா அனுபவங்களும் எனது சிந்தனையிலும் எனது நடவடிக்கைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என அவர் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் தனது 59 வயதில் 1997 இல் கோபி அனான் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகமாக பதவியேற்றார்.

அனான் அவ்வேளை 52 வருடங்களிற்கு வருடங்களிற்கு பின்னர் வங்குரோத்து நிலையில் காணப்பட்ட ஐநாவின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார்.

ஐக்கியநாடுகள் அமைப்பினை சீர்செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்த அனான் உலகின் நன்மைகளிற்காக மில்லேனியம் இலக்கு,எயிட்ஸ் மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டங்களையும் ஆரம்பித்தார்.

ஈராக் யுத்தம்

2003 இல் அனானிற்கான பெரும் ஆதரவு சக்தியாக காணப்பட்ட அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தது.

இறுதியில் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அங்கீகாரத்தை பெறாமல் அமெரிக்கா தனது நேசநாடுகளுடன் போரில் குதித்தது.

இதன் காரணமாக அனானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகின.

ஈராக் மீதான தாக்குதல்கள் ஐநா சாசன அடிப்படையிலும் எங்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் சட்டவிரோதமானவை என அவர் பின்னர் குறிப்பிட்டார்.

2004 இல் வெளியான எண்ணெய்க்காக உணவு மோசடியுடன் அனானின் பெயரும் சேர்க்கப்பட்டது,இதனால் அவர் நெருக்கடிகளை சந்தித்தார்.

இதற்கு 18 மாதங்களின் பின்னர் 2006 இல்தனது 70 வயதில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

எனினும் ஓய்வினை ஏற்றுக்கொள்ளும் மனமின்றி அவர் தனது கோபி அனான் பவுண்டேசனை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் பல நாடுகளில் சமாதான பணியில் ஈடுபட்டார்

2012 இல் சிரியாவிற்கான விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் எல்டர்ஸ் அமைப்பு மியன்மார் என அவரது பயணம் தொடர்ந்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top