படையினரின் உடல்களை அனுப்பி வைத்ததற்காக நன்றி தெரிவித்த ட்ரம்ப்.

கொரிய யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் உடல்களை அனுப்பி வைத்தமைக்காக வடகொரிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய ஜனாதிபதியை மீண்டும் சந்திப்பது குறித்து ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தலைவர் கிம்ஜொங் அன் அவர்களே உங்கள் வார்த்தையை காப்பாற்றியதற்காகவும் அமெரிக்க வீரர்களின் உடல்களை அனுப்பிவைத்தமைக்காகவும் உங்களிற்கு எனது நன்றி என ட்ரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உங்களின் இந்த நடவடிக்கை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை என தெரிவித்துள்ள டிரம்ப் நீங்கள் எழுதிய கடிதத்திற்கு நன்றி உங்களை மீண்டும் சந்திப்பதற்கு ஆர்வமாக உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடகொரியாவால் அனுப்பிவைக்கப்பட்ட உடல்களை ஹவாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமெரிக்கா உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது.