Canada

பயங்கர விபத்தில் கனடிய இன்டிகார் சாரதி படுகாயம்!

பென்சில் வேனியா-பொகொனோ ஓட்டப்பந்தய ஓடுதளத்தில் இடம்பெற்ற ABC Supply 500 Series இன்டிகார் பந்தயத்தில் கனடிய போட்டியாளரான றொபேட் விக்கென்ஸ் கடந்த ஞாயிற்றுகிழமை போட்டியிட்டார்.

மற்றொரு போட்டியாளரை முந்திக்கொள்ள முயற்சித்த சமயம் மோதப்பட்டுள்ளார். கனடிய பந்தயகாரரின் வாகனம் காற்றில் பறந்து வேலி ஒன்றுடன் மோதியது. 29-வயதுடைய விக்கென்ஸ் என்ற இவர் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பென்சில்வேனியா Lehigh Valley வைத்தியசாலையில் வலது கை மற்றும் மேல் முட்டிகளிலும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. குவெல்வை சேர்ந்த சாரதி ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top