பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் 8-வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல்!

ரொறொன்ரோ- றெக்ஸ்டேல் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் வைத்து எட்டு வயது பையன் ஒருவனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.வியாழக்கிழமை காலை குறிப்பிட்ட அங்காடிக்குள் விளையாட்டு பொருட்கள் பகுதியில் சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் பெண் ஒருவருடன் குறிப்பிட்ட அங்காடிக்குள் வந்துள்ளான்.
இஸ்லிங்ரன் அவெனியு மற்றும் றெக்ஸ்டேல் புளுவாட்டில் அமைந்துள்ள அங்காடியில் காலை 10-மணியளவில் சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த போது தெரியாத மனிதனொருவன் சிறுவனை தொடர்ந்து சென்று அவனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பொலிசார் கூறியுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரின் தோற்றம் கண்காணிப்பு கமரா பதிவிலிருந்து பெறப்பட்டு அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 5.9அடி உயரம் நடுத்தர தோற்றம் மற்றும் கட்டையான கறுப்பு முடி கொண்டதாகவும் மந்தமான நீல நிற சேர்ட்டும் நீல நிற ஜீன்சும் அணிந்து கருமை நிற முதுகுப்பபையும் அச்சமயத்தில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் புலன்விசாரனையாளர்களுடன் 416-808-2300 அல்லது அனாமதேயமாக குற்றத்தடுப்பு பிரிவினருடன் 416-222-TIPS (8477)உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.