News

பாரிஸ் அருகே கத்தி தாக்குதல்: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு – ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றது!

பாரிஸ் அருகே மர்ம நபர் நடத்திய கத்தி தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பிரான்சில் அதிகரித்து வரும் கத்திக்குத்து தாக்குதல்கள் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளன. திடீரென பொதுவெளியில் கத்தியுடன் வலம் வரும் மர்ம ஆசாமிகள், தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடுவிடுகிறார்கள். சில சமயம் போலீசில் சிக்கிவிடுகிறார்கள்.

கடந்த ஆண்டு பாரிஸ் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமைடைந்தனர். இதில் ஒருசில சம்பவங்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தகைய தாக்குதல்களை முறியடிக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி பயங்கரவாதிக கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். அதில் 130 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாவது தொடர்கிறது.

இந்நிலையில் பாரிசில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிராப்பர்ஸ் நகரில் இன்று மீண்டும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர், பொதுமக்களை கத்தியால் சரமாரியாக குத்தியதில் 3 பேரை ரத்த வெள்ளத்தில் வீழ்த்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.உடனே போலீஸ் படை அவரை சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றது.

அவர் கத்தியால் குத்தியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அவர்கள், அவரது தாயும், சகோதரியும் ஆவர் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top