பிரதமர் ரணிலின் அனுதாப செய்தியுடன் மனோ, இராதா, செல்வம் நேரில் அஞ்சலி!

தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை அரசின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, பிரதமரின் இரங்கல் செய்தியையும் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் வழங்கி அனுதாபங்களை தெரிவித்தனர்.